அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதலாவது டோஸாகப் பெற்றவர்களுக்கு இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ள 26 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசங்களில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, நாளை முதல் பைஸர் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
தடுப்பூசி செலுத்தும் திகதி மற்றும் நேரம் என்பன தகுதிபெற்றவர்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.