ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியுள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
இதனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதற்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு வழியேற்படுத்தும் வகையில் ஜயந்த கெட்டகொட பதவி விலகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.