பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இருபது புதிய அமைச்சர்கள் பதவி வகிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே நாட்டின் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நலத்திட்டங்களின் பலன் அடித்தட்டு மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு இந்த அமைச்சகம் பாலமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.