தமிழகத்தில் 3 ஆயிரத்து 300 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், ‘தமிழகத்தில் 3 ஆயிரத்து 300 பேர் கறுப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
கறுப்பு பூஞ்சை நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவமனைக்கு வந்தால் தேவையான சிகிச்சை வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும், கறுப்பு பூஞ்சை நோய்க்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கறுப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய 59 ஆயிரம் ஆம்போடெரிசின் மருந்து கையிருப்பில் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.