ஸ்பெயின் அணியை பனால்ட்டியில் வீழ்த்தி யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதி போட்டிக்கு இத்தாலி அணி நுழைந்துள்ளது.
வெம்ப்லி மைதானத்தில் இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளாலும் எவ்வித கோல்களையும் அடிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் பெடரிகோ சிசா முதலாவது கோலை அடித்தார்.
இதனை தொடர்ந்து ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா அணிக்காக முதலாவது கோலை அடிக்க இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
பின்னர் மேலதிக நேரம் ஒதுக்கப்பட்டபோதும் இரு அணிகளாலும் எவ்வித கோள்களும் அடிக்க முடியாமல் போக இறுதியில் பனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனை சிறப்பாக பயன்படுத்திய இத்தாலி அணி 4- 2 என்ற அடிப்படையில் கோல்களை அடித்து இறுதி போட்டிக்கு நுழைந்தது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி போட்டியில், இங்கிலாந்து அல்லது டென்மார்க் அணிக்கு இடையில் இடம்பெறும் அரையிறுதி போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இத்தாலி அணி மோதவுள்ளது.