• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழர்களை இலங்கையர்களாக ஏற்க சீனா மறுக்கின்றதா? -மனோ கேள்வி

தமிழர்களை இலங்கையர்களாக ஏற்க சீனா மறுக்கின்றதா? -மனோ கேள்வி

Dhackshala by Dhackshala
2021/07/07
in இலங்கை, பிரதான செய்திகள்
86 0
A A
0
38
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழர்களை இலங்கையர்களாக ஏற்க சீனா மறுக்கின்றதா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், உதயகுமார் பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதுவர் வினோத் ஜேகப், அரசியல் செயலாளர் பானு பிரகாஷ் உள்ளிட்ட இந்திய தரப்பை இந்திய இல்லத்தில் நேற்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தைகள்தான் 13ஆம் மற்றும் 16ஆம் திருத்தம் என்பனவையாகும். இன்று இந்த இரண்டையும் இலங்கை அரசு கைவிட்டு விட்டது.

13ம் திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை தேர்தல்களை இலங்கை அரசு ஒத்தி வைத்துவிட்டது. அதேவேளை மாகாணசபைகளுக்கு உரிய பாடசாலைகளையும் வைத்தியசாலைகளையும் மத்திய அரசின் நிர்வாகத்துக்கு உள்ளே சட்டவிரோதமாக சுவீகரித்து கொண்டுள்ளது.

16ம் திருத்தம் மூலமாகத்தான் தமிழ் மொழிக்கு நிர்வாக மொழி, கல்வி மொழி, மக்கள் சபை மொழி, சட்டவாக்க மொழி, நீதிமன்ற மொழி என்ற சட்ட அந்தஸ்துகள் கிடைத்தன. இவற்றுக்கும் இந்தியாத்தான் காரணமாக அமைந்தது.

ஆகவே 13ஐ பற்றி பேசும்போது, இந்திய அரசு 16 பற்றியும் இலங்கை அரசுடன் பேச வேண்டும்.

ஏனெனில் அதிகார பரவலாக்களை மட்டுமல்ல, இன்று மொழி உரிமையையும் இந்த அரசு பறித்துக்கொண்டு வருகிறது.

நான் அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்த இரண்டாம் மொழி பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளித்து உருவாக்கும் திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி விட்டது.

அதேபோல் இந்திய பிரதமர் எமது அழைப்பை ஏற்று மலையகம் வந்து வழங்கிய பத்தாயிரம் வீட்டு திட்டமும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.

இலங்கை அரசு இதை தாமதம் செய்கிறது. இதுவும் இந்திய அரசுக்கும் புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் நமது ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

ஆகவே இலங்கை அரசு, இந்திய அரசுடன் உடன்பட்ட இந்த திட்டங்களை வலியுறுத்த இந்த அரசுக்கு முழுமையான உரிமைகள் உள்ளன. இதை இந்தியா செய்ய வேண்டும்.

அதேபோல் தோட்ட தொழிலாளர்களின் நாட் சம்பளம் இழுபறியில் இருக்கிறது. அரசு முழுவதுமாக  தொழிலாளர்களை கம்பனிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டு அமைதி காக்கிறது.

இதுவே ஏனைய துறை சார்ந்த பெரும்பான்மை இனத்தை சார்ந்த தொழிலாளர்கள் என்றால் அரசு அக்கறை காட்டாமல் இருக்குமா?

நாட் சம்பளம் ஆயிரம் ரூபாய் என கூறிவிட்டு, வேலை செய்யும் நாட்களை தந்திரமாக கம்பனிகள் குறைத்து விட்டன. இதை அரசு கண்டுகொள்வது இல்லை.

அப்படியானால், இந்த மக்கள் வேறுநாட்டு பிரஜைகளா என கேட்கிறோம்? இந்த இந்திய வம்சாவளி தொழிலாள மக்கள் தொடர்பாக இந்திய அரசு கட்டாயமாக குரல் எழுப்ப வேண்டும்.

இந்த பிரச்சினைகள் தொடர்பான மேலதிக பேச்சுகளை நடத்த, தமிழ் முற்போக்கு கூட்டணி, பாரதம் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்திக்க விரும்புகிறது. இவற்றுக்கு கொரோனா நிலைமை சீரானதுடன் ஏற்பாடுகள் செய்துதர வேண்டும்.

சீனா இலங்கையில் வந்து நிலைகொண்டிருப்பது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பது மட்டுமல்ல, சீனா இலங்கையின் பல்மொழி, பன்மத, பல்லின அடிப்படையை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக நாம் சந்தேகம் கொள்கிறோம்.

ஆகவே தமிழர்களை சீனா இலங்கையர்களாக ஏற்க மறுக்கின்றதா என நாம் கேட்கிறோம்.

ஆகவேதான், இலங்கையில் சீனா நிலைப்பெறலை தமிழர் நாம் சந்தேகமாக பார்க்கிறோம் என்பதையும் இந்தியா புரிந்துக்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: இந்திய தூதுவர்மனோ கணேசன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Next Post

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசனை – அஞ்சலோ மத்யூஸ்

Related Posts

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!
இலங்கை

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

2026-05-08
யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!
இலங்கை

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

2026-05-08
வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!
இலங்கை

வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!

2026-05-08
மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !
இலங்கை

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

2026-05-08
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனை மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-05-08
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
Next Post
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசனை – அஞ்சலோ மத்யூஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசனை - அஞ்சலோ மத்யூஸ்

புளோரிடா கட்டிடம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு !

புளோரிடா கட்டிடம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு !

திருகோணமலையில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை!

திருகோணமலையில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

0
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

0
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

0
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

0
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.