அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 12 நாட்களுக்குப் பின்னர் இறுதி சடங்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
ஜூன் 24 இல் இடம்பெற்ற இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 110 க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை எனபதோடு 70 பேர் உள்ளே சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் தொடர்ந்தும் மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவாரத்துக்கு மேலாக மீட்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கத்தோலிக்க தேவாலயத்தில் ஒரு குடும்பத்தில் இறுதிச் சடங்கு இடம்பெற்றதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தில் உயிரிழந்த ஒரே குணம்பத்தை சேர்ந்த நான்குபேரின் இறுதி சடங்கு நிகழ்வு இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.