நாட்டின் சில பகுதிகள் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகளே தனிமைப்படுத்தலில் இருந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டதாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குஉ ட்பட்ட டன்சினன் மத்திய பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட நாகராஜ வலவ்வ பிரதேசமும் தனிமைப்டுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.