ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மியனமாரில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை எதிர்த்துப் போராடி வருகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பிலிருந்து சுகாதார ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியமை காரணமாக நாட்டில் மருத்துவ சேவை பாதிப்படைந்துள்ளது.
தற்போது மியன்மாரின் 54 மில்லியன் மக்கள் தொகையில் 2.8% மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இருப்பினும் 76 வயதான ஆங் சான் சூகி எப்போது தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் அல்லது அவருக்கு எந்த தடுப்பூசி வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டு இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு மாத்திரமே அவர் வெளித்தோன்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.