மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
முன்னதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார், குழந்தைகள் – பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ ஆகிய மூவரும் இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேநேரம் மத்திய சமூகநலத்துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமையால் அவரும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.