கேரளாவின் 8 மாவட்டங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுவடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும்.
மேலும் அரபிக்கடலின் மேற்கு பகுதியில் சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் காணப்படும்’ எனத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அம்மாநில அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.