இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் சோதனை தொகுதி உற்பத்தி ஆரம்பமாகியுள்ளதாக மோர்பென் லேபரட்டரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் சோதனை தொகுதி உற்பத்தி தொடங்கியுள்ளது.
இந்த முதல் தொகுதி தடுப்பூசிகளை தரக்கட்டுப்பாட்டுக்காக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உருவாக்கிய கமலேயா சென்டருக்கு அனுப்பி வைப்போம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் பல நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளன. அதில் டெல்லியை தலைமையிடமாக கொண்டுள்ள மோர்பென் லேபரட்டரிசும் ஒன்றாகும்.