அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதலாம் டோஸைப் பெற்றவர்களுக்கு 2ஆம் டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜூலை 3ஆம் வாரத்தில் 1.4 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதலாவது டோஸாக அஸ்ட்ரா செனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்தும் நடவடடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, நேற்றைய தினம் 2 ஆயிரத்து 171 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸாக பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டதுமை குறிப்பிடத்தக்கது.