கேரள மாநிலத்தில் 15 பேருக்கு சிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகல் நேரத்தில் உலவும் ஏடிஸ் ஏஜிப்தி எனப்படும் பெண் நுளம்பு கடிப்பதால் பரவும் இந்த வைரஸால் உயிரழப்புகள் ஏற்படாது எனவும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் ஏழு நாட்களில் குணமடைவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே சிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.