இரண்டு அமைச்சுகளின் விடயதானங்கள் திருத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கம் ஆகிய அமைச்சுகளின் விடயதானங்களே மேலும் திருத்தப்பட்டு இவ்வாறு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய, நிதி அமைச்சின் கீழ் இருந்த பௌத்த மத மறுசீரமைப்பு நிதியம், புத்த சாசன நிதியம் மற்றும் மத்திய கலாசார நிதியம் ஆகியன நேற்று ஸ்தாபிக்கப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.