சுற்றுலாத்துறையில் நேரடியாக தொடர்புபட்டுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டதின் முதலாவது கட்டம் தென் மாகாணத்தில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்டுள்ள 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன், 8 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
தென் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் கண்டி, நுவரெலியா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் சுற்றுலாத்துறையில் ஈடுபடுவோருக்கு தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.