ஆழமானதும் நடைமுறை சாத்தியமானதும் மற்;றும் பயனுள்ள ஒத்துழைப்பின் மூலமே இருதரப்பிற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் சுட்டிக்காட்டியிருந்தார்.
இரண்டு நாட்கள் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள, வியட்நாம் ஜனாதிபதிக்கு, உத்தியோகப்பூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
அதனை தொடர்ந்து ஜந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டிருந்தன.
இதனை தொடர்ந்து வியட்நாம் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அங்கு விசேட உரையினையும் ஆற்றியிருந்தார்.
இன்று முற்பகல் கொழும்பு பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள ஹோ சி மின் உருவச்சிலைக்கு வியட்நாம் ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தினார்.
கொழும்பு பொது நூலகத்திற்கு சென்றிருந்த வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் , ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவேற்றிருந்தார்.
ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய வியட்நாம் ஜனாதிபதிக்கு, பாடசாலை மாணவர்களால் வரையப்பட்ட ஓவியங்களும் கையளிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கொழும்பு பொது நூலகத்தில் அமைந்துள்ள “வியட்நாம் – ஹோ சி மின் வளாகத்தை” விரிவாக்கம் செய்யும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட வியட்நாம் ஜனாதிபதி,
அங்கிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத் தொகுப்பைப் பார்வையிட்டார்.
இதன்போது கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசாரிடம் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டிருந்தது.














