மட்டக்களப்பில் 2ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு- வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) 2ஆம் கட்ட தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதாவது முதலாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தவறியவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவரும் நிலையில், 2ஆம் கட்டமாக தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை முதலாம் கட்டமாக தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட அரச உத்தியோகத்தர்கள், சுகாதார துறையினர், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் 60வயதுக்கு மேற்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினருக்கு குறித்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வவுணதீவு பிரதேச செயலகத்தில், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அனட்ஜோதிலக்ஸ்மி தலைமையில், தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த தடுப்பூசியை பெரும்பாலானோர் ஆர்வமாக வந்து பெற்றுக்கொள்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.