வேல்ஸில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்படாது என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சமூக வழிகாட்டுதலை பராமரிக்க முடியாத இடங்களில் இரண்டாம் நிலை மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தற்போதைய வழிகாட்டுதல் கூறுகிறது.
அதற்கு பதிலாக சோதனை மற்றும் பாதுகாத்தல் (டிடிபி) முறை பயன்படுத்தப்படும் என வேல்ஸின் கல்வி அமைச்சர் ஜெர்மி மைல்ஸ் தெரிவித்துள்ளார்.
வேல்ஸின் கல்வி அமைச்சர் தலைமை ஆசிரியர்களுக்கு எழுதிய கடிதத்தில் மாற்றத்தையும், கல்வியில் சில இயல்புநிலைகளை மீண்டும் கொண்டுவருவதற்கான கூடுதல் திட்டங்களையும் அறிவித்தார்.
மேலும், செப்டம்பர் இறுதிக்குள், வேல்ஸில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த மே மாதம் 17ஆம் திகதியில் இருந்து இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் முகக்கவசம் தேவையில்லை.