இங்கிலாந்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தேசிய சுகாதார சேவை (என்ஹெச்எஸ்) ஊழியர்களை கொவிட் தொடர்பு எனக் கண்டறிந்தால் சுயமாக தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிப்பதை அமைச்சர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
ஊழியர்களின் பற்றாக்குறை குறித்த அச்சங்களுக்கு மத்தியில், விதிகளை மாற்றுமாறு சுகாதார நிறுவனங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.
எனினும், இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், இந்த நடவடிக்கை பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கான ஆதாரங்களை அமைச்சர்கள் காண விரும்புவதாகவும் அறியமுடிகின்றது.
இது முன்னோக்கிச் சென்றால், எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதி முதல் தினசரி சோதனைகள் மூலம் சுய தனிமை முறை மாற்றப்படும். பரந்த தடைகள் தளர்த்தப்படும்.
இந்த யோசனை இதேபோன்ற கொள்கையை எதிரொலிக்கிறது. இது ஒகஸ்ட் 16ஆம் திகதி முதல் இங்கிலாந்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைவருக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.