இரசாயன உர இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகங்களில் வௌியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்திலும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.