நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதிவரை நடைபெறும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகி மொத்தமாக 19 நாட்கள் நடைபெறவுள்ளது. அதன்படி ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி நிறைவடையும்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஊடகத்தினரும் கொரோனா விதிகளின்படி அனுமதிக்கப்படுவர். கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை.
ஆனால் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்க கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தப்படும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும்’ எனத் தெரிவித்துள்ளார்.