நாட்டில் இதுவரை 41 இலட்சத்து 78 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நேற்று(திங்கட்கிழமை) மாத்திரம் 173,988 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 40,276 பேருக்கு போடப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 385,849 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் 13,357 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போட்டப்பட்ட நிலையில் இதுவரை 138,801 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
மேலும் 14,464 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
அதேபோல், நேற்றைய தினம் நாட்டில் 4725 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 23073 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.