இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் எடுத்த முடிவு பொறுப்பற்றது என மூத்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இங்கிலாந்தில் கடைசியாக மீதமுள்ள கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என்று பிரதமர் திங்கட்கிழமை அறிவித்தார்.
தற்போதைய கொவிட் அலைகளின் உச்சநிலை எதிர்பார்க்கப்படும் ஒகஸ்ட் நடுப்பகுதியில் இறப்புக்கள் ஒரு நாளைக்கு 100 முதல் 200 வரை அடையும் நிலையில், ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரித்தானிய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து பிரித்தானிய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சாந்த் நாக்பால் கூறுகையில், ‘இது பொறுப்பற்றது மற்றும் வெளிப்படையாக ஆபத்தானது’ என கூறினார்.