கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தகவல்கள் தொடர்பிலான தரவுகளில் சிக்கல்கள் நிலவுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதல் தடுப்பூசி திட்டத்தின் போது சுகாதாரத் துறையினரால் தரவுகளை சேகரித்த சந்தர்ப்பத்தில் பெரும்பாலும் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

















