இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி ஆசிரியர் சேவை சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
தங்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சேவை சங்கங்களின் தலைவர்களை பலவந்தமாக தனிமைப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
14 சங்கங்கள் இணைந்து இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்பது குறப்பிபடத்தக்கது.