நாட்டில் இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினமும் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படுகிறது.
மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு, சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தும் பணிகள் இன்று முதல் கொழும்பு விஹாரமாதேவி பூங்கா அரங்கில் இடம்பெறும் என இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் காலை 8.30 முதல் பிற்பகல் 4.30 வரையான காலப்பகுதிக்குள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்துவதற்காக வருகைதருவோர், மேல் மாகாணத்தில் நிரந்தர வதிவிடத்தை கொண்டமைக்கான அத்தாட்சிகளாக தேசிய அடையாள அட்டையுடன் மின்சார அல்லது தொலைபேசி கட்டணப் பட்டியல் அல்லது வாக்காளர் பட்டியலின் பிரதி அல்லது கிராம அலுவலரால் வழங்கப்பட்ட வதிவிட அத்தாட்சி ஆகியவற்றை சமர்ப்பித்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.