வல்வெட்டித்துறையில் நேற்று(புதன்கிழமை) 38 பேர் உள்ளடங்களாக இரண்டு நாள்களில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று 38 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 156 பேரிடம் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
மேலும் 32 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று முந்தினம் 9 பேருக்கு தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.