இந்தியா – ரஷ்யாவிற்கு இடையிலான உறவின் விரிவாக்கத்திற்கு வானமே எல்லை என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாசேவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா – ரஷ்யா இடையே நடைபெறவுள்ள உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து இருதரப்பு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்தும் பேசப்படும்.
இந்த மாநாடு இரு நாடுகளுக்குகிடையே பெரிய அத்தியாயமாக இருக்கும். மேலும் கொவிட் பரவலை தடுப்பது தொடர்பான விவாதமும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
தொற்றுக்கு எதிராக ரஷ்யாவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ஒட்டுமொத்தமாக ரஷ்யா – இந்தியா இடையே ஒத்துழைப்பிலும், உறவின் விரிவாக்கத்திலும் வானமே எல்லையாக உள்ளது’ எனத் தெரிவித்தார்.