பிரித்தானியாவில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை, ஜூன் முதல் மூன்று மாதங்களில் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை கடந்து விட்டதாக புதிய தரவு காட்டுகிறது.
தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்.), ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 862,000 வேலைகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது 2020ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களை விட 77,500 அதிகமாகும்.
விருந்தோம்பல் மற்றும் சில்லறை விற்பனையில் காலியிடங்களால் இந்த உயர்வு உந்தப்பட்டதாக (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.
தொற்றுநோய்களின் எண்ணிக்கையும் ஜூன் மாதத்தில் 356,000 அதிகரித்துள்ளது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிகப்பெரிய உயர்வு ஆகும்.
மே மாதத்தில் கொவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியதைத் தொடர்ந்து அதிகமான மக்கள் வேலைக்குத் திரும்பியதால், உணவு மற்றும் தங்குமிடத் துறைகளில் ஊதியத்தில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டது. இது விருந்தோம்பல் துறையை மீண்டும் திறக்க அனுமதித்தது.