இலங்கையில் 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மருந்து உற்பத்தி வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசியை வழங்கினோம்.
இதனைத் தொடர்ந்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி ஏற்றப்படுகிறது.18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தற்போது தடுப்பூசி ஏற்றப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக நாம் தற்போது கவனத்திற்கொண்டுள்ளோம்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை முறையாக முன்னெடுக்க வேண்டும் என்பதினாலேயே இவ்வாறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்” என்றும் மருந்து உற்பத்தி வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் கூறினார்.