• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் கடலட்டை பண்ணைகள் குறித்த சில அரசியல்வாதிகளின் கருத்து எதிர்காலத்தைப் பாதிக்கிறது – கடற்றொழிலாளர்கள் விசனம்!

யாழில் கடலட்டை பண்ணைகள் குறித்த சில அரசியல்வாதிகளின் கருத்து எதிர்காலத்தைப் பாதிக்கிறது – கடற்றொழிலாளர்கள் விசனம்!

Dhackshala by Dhackshala
2021/07/20
in இலங்கை
73 0
A A
0
55
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசியல் இலக்குகளை அடைந்துகொள்கின்ற நோக்கோடு அரசியல்வாதிகள் சிலரினால் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தினை தோற்றுவித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு பணம் பெற்றுக்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்த கருத்துக்கு தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில கடலட்டைப் பண்ணை உருவாக்கும் திட்டம் தொடர்பாக அண்மைக் காலமாக வெளியாகின்ற கருத்துக்கள் தொடர்பாக கிளிநொச்சியில் கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள், “கடலட்டைப் பண்ணை உருவாக்கம் என்பது அன்றாடம்காட்சிகளாகவும் பொருளாதார அடிமைகளாகவும் வாழ்ந்து வந்த எங்களுக்கு கிடைத்திருக்கின்ற வரப்பிரசாதமாகவே கருதுகின்றோம்.

கடந்த காலங்களில் அனைத்தையும் இழந்து, நாதியற்றவர்களாக இருந்த எங்களுக்கு கடலட்டைப் பண்ணை உருவாக்கம் என்பது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தோவின் முயற்சியினாலும் தற்துணிவான தீர்மானங்களினாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் வடக்கு மாகாணத்தில் சுமார் 25இற்கும் மேற்பட்ட பண்ணைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் நூற்றுக்கணக்கான கடலட்டைப் பண்ணைகளை அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாணத்திற்கான பிரதானி அண்மையில் தெரிவித்துள்ளார். இது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தியாகும்.

ஏனெனில், ஏற்கனவே இரணைதீவுப் பிரதேசத்தினைச் சேர்ந்த எமக்கு இதுவரை 83 கடலட்டைப் பண்ணைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் எமது பிரதேசத்தில் விண்ணப்பித்திருக்கின்றார்கள். அவர்களுக்கும் பண்ணைகள் வழங்கப்படுகின்ற பட்சத்தில் எமக்கான எதிர்காலத்தை நாம் வளமானதாக உருவாக்கிக் கொள்ள முடியும்.

நாங்கள் யுத்தத்தினால் நாடோடிகளாக அலைந்து அனைத்தையும் இழந்து, நாளாந்த வாழ்கையில் எமது அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே திண்டாடிக் கொண்டு இருக்கின்றவர்கள்.

அப்படிப்பட்ட நாங்கள் தலா பத்து இலட்சம் கொடுத்து கடலட்டைப் பண்ணைகளை பெற்றிருக்கின்றோம் என்று தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

இவ்வாறான பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை வெளியிடுவதை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் போன்றவர்கள் நிறுத்த வேண்டும். அவர்களிடம் நாம் மன்றாட்டமாக கேட்கின்றோம். தயவு செய்து வைக்கோல் பட்டடை நாய்கள் போன்று செயற்படாதீர்கள்.

உங்களால் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனையவர்கள் செய்வதை இடையூறு செய்யாமல் இருங்கள்.

நீங்கள் அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காக வெளியிடுகின்ற இவவாறான கருத்துக்களினால், கடலட்டைப் பண்ணை உருவாக்கம் தடைப்படுமானால், விண்ணப்பித்துவிட்டு பண்ணைகளுக்காக காத்திருக்கின்ற நூற்றுக்கணக்கானோரின் வாழ்வாதாரத்திற்கான மாற்றுத் திட்டம் உங்களிடம் என்ன இருக்கின்றது? என்று கேட்க விரும்புகின்றோம்” என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related

Tags: கடற்றொழிலாளர் சங்கங்கள்டக்ளஸ் தேவானந்தா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!

Next Post

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 701பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு!

Related Posts

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!
இலங்கை

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

2026-05-08
யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!
இலங்கை

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

2026-05-08
வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!
இலங்கை

வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!

2026-05-08
மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !
இலங்கை

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

2026-05-08
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனை மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-05-08
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
Next Post
கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,686பேர் பாதிப்பு- 6பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 701பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு!

கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தொடர்கிறது!

கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தொடர்கிறது!

லெபனானிலிருந்து இஸ்ரேல் நோக்கி  ரொக்கெட் தாக்குதல்

லெபனானிலிருந்து இஸ்ரேல் நோக்கி ரொக்கெட் தாக்குதல்

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

0
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

0
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

0
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

0
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.