கோவேக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர், மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மொடர்னா தடுப்பூசின் பயன்பாட்டிற்கு கடந்த மாதம் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இருப்பினும் இந்த தடுப்பூசிகள் எப்பொழுது இந்தியாவிற்கு வந்து சேரும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.