ஆங்கிலக் கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்காக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் தனது கடற்கரைகளில் ரோந்து செல்லும் பொலிஸாரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க தீர்மானித்துள்ளது.
லண்டன் மற்றும் பாரிஸில் உள்ள அமைச்சர்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்காக இங்கிலாந்து 54 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை வழங்க திட்டமிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மட்டும் 430 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயை கடந்ததாகவும் செவ்வாய்க்கிழமை 287 பேர் இங்கிலாந்தை வந்தடைந்ததாகும் அந்நாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டு, 8,460 பேர் இங்கிலாந்தை வந்தடைந்துள்ள நிலையில் அவற்றினை கட்டுப்படுத்த இரு நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தப்பட்டுள்ளது.