பிலியந்தலை- ஜம்புரலிய, லுல்லவில பகுதியிலுள்ள ஆடைதொழிற்சாலையில் பணிபுரிகின்ற 6 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்படுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் பணிபுரிகின்ற 186 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் எழுமாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாதிரிகள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த ஆய்வின் முடிவில், 6 பேருக்கு டெல்டா கொரோனா திரிபு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்டோர் பணிப்பாற்றி வருவதாகவும் அவர்களில் 85 வீதமானோர் தொழிற்சாலையை அண்மித்த பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.