சினோபார்ம் தடுப்பூசியின் மேலும் 20 இலட்சம் டோஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.
அதற்படி, குறித்த தடுப்பூசிகள் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.