தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோரக் மாவட்டத்தினை ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் துணிச்சலான பாதுகாப்பு வீரர்களினால்தான் இந்த மாவட்டத்தை தலிபான்களிடமிருந்து விரைவாக மீட்டெடுக்க முடிந்தது என ஹெராத் ஆளுநரிக் செய்தித் தொடர்பாளர் ஜெய்லானி ஃபர்ஹாத், டோலோ நியூஸிடம் கூறியுள்ளார்.
குனார் மாகாணத்தில், காசி அபாத் மாவட்டத்தை தலிபான் அண்மையில் கைப்பற்றியது.
இவ்வாறு சமீப காலங்களாக தலிபான்கள் பல பிராந்தியங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றின.
இந்நிலையிலேயே தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோரக் மாவட்டத்தினை ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.