நிதி திருத்த சட்டவரைபு அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த நிதி திருத்த சட்டவரைபு சட்டமாக மாற்றப்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடக் கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் கொட்டகொட விதானகே தாக்கல் செய்த இந்த மனு, இன்று முற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய, குமதின விக்ரமசிங்க, ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த விசாரணை இடம்பெறவுள்ளது.
குறித்த நிதி திருத்த சட்டவரைபு நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.