மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மாற்றியமைக்கப்பட்ட மூன்றாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, அவுஸ்ரேலியா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பார்படோஸ் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 45.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லீவிஸ் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் டேரன் பிராவோ 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக் 3 விக்கெட்டுகளையும் ஹசில்வுட், அகர் மற்றும் ஸம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டர்னர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 153 என்ற என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 30.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மத்தியு வேட் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் அலெக்ஸ் கெர்ரி 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், செல்டோன் கொட்ரேல், அகீல் ஹொசைன், அல்சார்ரி ஜோசப், ஹெய்டன் வோல்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக அஸ்டன் அகரும் தொடரின் நாயகனாக மிட்செல் ஸ்டாக்கும் தெரிவுசெய்யப்பட்டனர்.