கிளிநொச்சியில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வயது முதிர்ந்தவர்கள், நடமாட முடியாதவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்போர் உள்ளிட்டோருக்கு நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி சரவணபவனின் நேரடி கண்காணிப்பின் கீழ் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், 9 இடங்களிலும் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஊடாகவும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையைில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக சிரேஸ்ட தமிழ் அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரியும் 88 வது வயதில் இன்று சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.