ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக 8 ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.