அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.