பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி எப் -10 விண்கலத்தின் பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈஓஎஸ்-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எப் 10 என்ற ரொக்கெட்டில் பொருத்தப்பட்டு இன்று (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்தப்பட்டது.
இருப்பினும் எதிர்பாராத விதமாக கியோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக ரொக்கெட்டின் பயணத் திட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக இஸ்ரோ தலைமை விஞ்ஞானி சிவன் தெரிவித்துள்ளார்.