பிரித்தானியாவின் பொருளாதாரம் ஏப்ரல்- ஜூன் மாதங்களுக்கு இடையில், 4.8 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
எனினும், அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் ‘பேங்க் ஒஃப் இங்கிலாந்து’ கணிப்புகளுக்கு குறைவாக உள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இரண்டாவது காலாண்டில் விரிவாக்கம் குறைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.
கடந்த வாரம், ‘பேங்க் ஒஃப் இங்கிலாந்து’ , பொருளாதாரத்தின் பெரும்பகுதி முடக்கப்பட்டதிலிருந்து மீண்டும் திறக்கப்பட்ட காலத்தில் ஜிடிபி 5 சதவீதம் உயரும் என்று எதிர்பார்த்தது.