ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு ஒரு மாதத்தில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு 1000 அல்லது 2000 என இருந்த பாதிப்பு, தற்போது ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
இதன்படி, கடந்த 7 நாட்களில் 1 இலட்சம் பேரில் 27.6 பேருக்கு பாதிப்புகள் என்ற அளவில் இருந்து 30.1ஆக அதிகரித்துள்ளது.
இது, ஜேர்மனியில் ஒரு மாதத்தில் பதிவான கொரோனா பாதிப்புகளை விட 5 மடங்கு அதிகம் ஆகும்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 38இலட்சத்து 19ஆயிரத்து 845பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 92ஆயிரத்து 367பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 529பேர் பாதிக்கப்பட்டதோடு 19பேர் உயிரிழந்துள்ளனர்.