225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை (Right to Information application) தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கி ஓகஸ்ட் 12ஆம் திகதி தகவல் அறியும் உரிமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டம் பெப்ரவரி 16ஆம் திகதி தொடங்கியது.
எனினும், தற்போதுவரை 146 பேர் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக RTIஇன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுள்ள அதேநேரத்தில், 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் கொரோனா தடுப்பூசிகளை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களின் விபரங்கள் தங்களிடம் இல்லை என RTI தெரிவித்துள்ளது.
மேலும் மொடர்னா, பைசர், சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரமும் தங்களிடம் இல்லையென RTI தெரிவித்துள்ளது.