நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமைர்வை இன்றைய தினம் மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் பணிக்குழாம் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணிக்குழாமினர் ஆகியோரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.