கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 188 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 16 ஆயிரத்து 528 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 65 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.