தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.
‘நாங்கள் எல்லாம் ஆப்கானிஸ்தானிய பெண்கள்’ என்று எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியிருப்பதால், பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.
இதேவேளை, தலிபான்களிடம் சரணடையப் போவதில்லை என ஆப்கானிஸ்தானின் துணை ஜனாதிபதியாக இருந்த அம்ருல்லா சலேஹ் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.