ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தலிபான்களின் தளபதியும் ஹக்கானி பயங்கரவாத குழுவின் மூத்த தலைவருமான அனஸ் ஹக்கானி, ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயை சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தலிபான்களின் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆப்கான் அரசின் முன்னான் அமைதிக்கான தூதர் அப்துல்லா அப்துல்லாவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.